தனுஷுக்கு ஜோடியாகும் இந்துஜா
செப் 04, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் "நானே வருவேன்" படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!