
காடன் ஹிந்தி - டிவியில் நேரடி ரிலீஸ்
தற்போது ஹிந்திப் பதிப்பான "ஹாத்தி மேரி சாத்தி"யை செப்டம்பர் 18ம் தேதி ஜீ சினிமா டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள். அன்றைய தினம் ஈராஸ் நவ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கில் வரவேற்பைப் பெறாத காரணத்தால் ஹிந்தியிலும் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, படத்தை நேரடியாக டிவியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திலேயே ஹிந்தியிலும் ராணா டகுபட்டி நடித்துள்ளார். தமிழில் விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் புல்கிட் சாம்ராட் நடித்துள்ளார்.
படத்தில் தமிழ் முகங்களை விட ஹிந்தி முகங்கள் அதிகம் இருந்ததால்தான் படம் தமிழில் தோல்வியைத் தழுவ ஒரு காரணமாக இருந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!