
நயன்தாராவுடன் மீண்டும் நடிக்கும் அஜ்மல்
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக நடித்திருந்தார் அஜ்மல். இந்தநிலையில் மீண்டும் நயன்தாராவுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறார் அஜ்மல். மலையாளத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் படத்தில் அஜ்மலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தானே கூறியுள்ள அஜ்மல், இந்தப்படம் அல்போன்ஸ் புத்ரனின் நேரம் படம் பாணியில் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!