
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் டிவி நடிகைகள் : அடித்தது ஜாக்பாட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், விஜய் சேதுபதிக்கு இந்த படத்தின் கதைப்படி மூன்று மனைவிகள் உள்ளனராம். அதற்கு நாயகிகளை தேடி வந்த படக்குழுவினர் சின்னத்திரை நடிகைகளை மொத்தமாக களமிறக்கியுள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ள தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மைனா நந்தினியும் விஜய் சேதுபதியின் மற்றொரு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராமில் இயக்குனர் லோகேஷுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவது ஜோடியாக விஜே மகேஸ்வரி நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!