
துப்பறிவாளன் 2, கிடப்பில் போட்ட விஷால்
அதற்குப் பிறகு அவர் நடித்த "ஆக்ஷன், சக்ரா" ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. "எனிமி" என்ற படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அடுத்து "வீரமே வாகை சூடும்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றோடு தனது 32வது படத்தில் இன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். "துப்பறிவாளன் 2" படம் மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.
"துப்பறிவாளன்" படத்தின் முதல் பாகம் 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, "துப்பறிவாளன் 2" படத்தை விட்டு விலகிய பிறகு தான் ஆரம்பித்த, "பிசாசு 2" படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் இன்று முடித்துவிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!