
நயன்தாராவுடன் நடிக்கும் விதார்த்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கும் படமும் ஒன்று. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது. இதில் விதார்த் மற்றும் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீ நடித்து வருகிறார்கள். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அந்த படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறார். இதில் நயன்தாராவுக்கு உதவும் நண்பர்களாக விதார்த்தும், ஸ்ரீயும் நடிப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!