
இசை அமைப்பாளர் ஆன பவர் ஸ்டார்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் |எழுதி. இயக்குவதுடன் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். புதிதாக திருமணமான தம்பதிகள் ஒரு பங்களாவிற்கு குடியேறுகிறார்கள். அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறேன். என்கிறார்.
சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!