
இந்தியன் 2 பட பிரச்சனையும் முடிவுக்கு வருகிறது
இதற்கிடையே "இந்தியன் 2" படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி மத்தியஸ்தராக இருந்து இருதரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துபடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் "இந்தியன் 2" பட பிரச்சனையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை கமல் முடித்த பிறகு "இந்தியன் 2" படத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!