
தமிழில் வெளியாகும் வரலட்சுமியின் மலையாள படம்
5 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமி மலையாளத்தில் நடித்த படம் கஸாபா. இதில் மம்முட்டி, நேகா சக்சேனா, ஜெகதீஷ், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நிதின் ரஞ்சி பணிக்கர் இயக்கி இருந்தார், ராகுல் ராஜ் இசை அமைத்திருந்தார். சமீர் ஹக் ஒளிப்பதிவு செய்திருந்தார், குட்வில் எண்டர்டெயின்மென்ட் சார்பில் இயக்குனரே தயாரித்திருந்தார்.
இந்த படம் தற்போது சர்க்கிள் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளிவருவதாக அறிவித்துள்ளனர். ஏ.கே.பிக்சர்ஸ் சார்பில் ஏ.டி.கிருஷ்ணன் வெளியிடுகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!