
ஆயுத பூஜைக்கு வெளி வருமா வலிமை ?
அதற்கடுத்து பெரிய படம் என்றால் "வலிமை" மட்டும்தான். இப்படத்திற்கான ஒரு வாரப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லி வருகிறார்கள். மற்ற படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டது. படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகளும் ஏற்கெனவே நடந்து வருகிறது.
விசேஷ நாட்களில், விடுமுறை நாட்களில்தான் பெரிய படங்கள் வெளியாகும். அந்த விதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் அக்டோபர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வருகிறது. அதற்கடுத்த இரண்டு நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அந்த சமயம் "வலிமை" படத்தை வெளியிட சரியான தினம் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சுமார் 50 நாட்கள் இருக்கிறது. அதற்குள் படத்தின் எஞ்சிய வேலைகளை முடித்து, படத்தின் வியாபாரத்தையும் முடிக்கவும் முடியும் என்கிறார்கள்.
படத்தைத் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பதுதான் அஜித்தின் கண்டிஷன் என்பது நமக்குக் கிடைத்த தகவல். எனவே, தியேட்டர்காரர்களின் எதிர்பார்ப்பின் படி அக்டோபர் 14 படத்தை வெளியிட அஜித் முடிவு செய்தால் அக்டோபர் மாதம் அஜித்தின் வலிமையான கொண்டாட்டமாக அமைந்துவிடும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!