நானே வருவேன் படப்பிடிப்பு நாளை இல்லை...
ஆக 19, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருடைய 43வது படமான "மாறன்" படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்து "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்து வருகிறார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள "நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பு நாளை ஆகஸ்ட் 20 முதல் ஆரம்பமாகும் என ஜுன் மாதமே அறிவித்தார்கள்.
"திருச்சிற்றம்பலம்", தெலுங்கு இயக்குனர்கள் சேகர் கம்முலா இயக்க உள்ள படம், வெங்கி அட்லுரி இயக்க உள்ள படம் என தனுஷ் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானதால் எந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும், எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பம் நிலவியது.
அந்த சமயத்தில் தான், "திருச்சிற்றம்பலம்" பட அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே "நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பை அறிவித்தார்கள். இப்போது "நானே வருவேன்" படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். இதனால், தனுஷ் நடித்து அடுத்து "மாறன்", "திருச்சிற்றம்பலம்" ஆகிய படங்கள் வெளிவந்த பிறகே மற்ற படங்கள் வரும் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!