
நடிகை சுஹாசினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழில், ‛நெஞ்சத்தை கிள்ளாதே படம் மூலம் அறிமுகமானவர் சுஹாசினி. திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் இவர், 1988ல் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் சுஹாசினி பேசப்பட்டார்.
|
கடந்த ஆக. 15ம் தேதி இவரது 60வது பிறந்தநாள். இதற்காக சென்னையில் நடந்த பார்ட்டியில் மணிரத்னம், கமல், பாக்யராஜ், மோகன், குஷ்பு, பூர்ணிமா, ஷோபனா, அம்பிகா, சுமலதா உள்ளிட்ட 1980களில் நடித்த நடிகர், நடிகையர் பங்கேற்றனர். பார்ட்டியில் எடுத்த படங்களை குஷ்பு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கமல், குஷ்பு உள்ளிட்டவர்கள் மது கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
|
முன்னதாக அன்றைய தினம் தனது பெற்றோர் சாருஹாசன் - கோமளம், சித்தப்பா கமல்ஹாசன், சகோதரிகள் நந்தினி, அனு உள்ளிட்டோருடன் சென்னை, எல்டாமஸ் ரோட்டில் உள்ள இல்லத்தில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!