
விறுவிறுப்பான டப்பிங் பணிகளில் அந்தகன்
இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தியாகராஜன் தற்போது டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பிரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோர் இந்தப்படத்திற்கான தங்களது டப்பிங் பணிகளை முடித்து கொடுத்தனர். தற்போது சமுத்திரக்கனி டப்பிங் பேசி வருகிறார். தியேட்டர்கள் திறப்பு என்கிற அறிவிப்பு வரும்போது இந்தப்படம் திரையிடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஒரு தயாரிப்பாளராக வேகமாக செயல்பட்டு வருகிறார் தியாகராஜன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!