
தன்னம்பிக்கையோடு இருக்கிறேன் - மலையாளத்தில் களமிறங்கும் சஞ்சனா
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சஞ்சனா கல்ராணி தற்போது மலையாளத்தின் பக்கமும் கவனம் செலுத்துகிறார். மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கும் சஞ்சனா கல்ராணி, டாக்டர் பிரவீன் ராணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து சஞ்சனா கூறியிருப்பதாவது: கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. கடந்த ஆண்டு நிறைய கதவுகளை மூடினார். இப்போது நிறைய கதவுகளை திறக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்துவிட்டேன். அதனால் நான் பயந்துவிடவில்லை. முன்பை விட தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். கடவுளிடம் இருந்து எனக்கு நியாய தீர்ப்பு கிடைக்கும். என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!