
ஆக்ஷன் வேடங்களை விரும்பும் பூஜா ஹெக்டே
இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே அரைக்கால் சட்டையுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இதற்கிடையில் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் என்ற பிரம்மாண்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது, விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர். சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது. எனக்கு ஆக்ஷன் ரோல்களில் நடிக்க ஆசை" என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!