
தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரீனுக்கு கொரோனா பாதிப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷெரீன், அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
இந்நிலையில் தான் மீண்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரீன் தெரிவித்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெற்று வருவேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நடிகை ஷெரீன் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டார். இருந்தபோதிலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!