
விரைவில் துவங்கும் சசிகுமார் - சத்யசிவா படம்
ஆக 16, 2021
Advertisement
நடிகர் சசிகுமார் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் சில படங்கள் முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இந்நிலையில் செந்துார் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இதற்குமுன் இதே நிறுவனத்திற்காக ராஜவம்சம் படத்தில் சசிகுமார் நடித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சத்யசிவா இயக்குகிறார். இவர் கழுகு 1 மற்றும் 2ம் பாகத்தை இயக்கியிருந்தார். நாயகியாக ஹரிப்பிரியா நடிக்க, விக்ராந்த், துளசி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!