
செம ஸ்பீடில் படமாகும் காசேதான் கடவுளடா
சித்ராலயா கோபு இயக்கிய தமிழின் எவர்கிரீன் காமெடி படமான காசேதான் கடவுளடா படம்தான் அதே பெயரில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் கூறியதாவது: படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச்சரியாக நடைபெறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது, எனது படக்குழுவினர் தான். அவர்களுக்கு, என் மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும் தந்த மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தற்போது படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!