
சந்தானத்தின் இரண்டு படங்கள் ஓடிடி ரிலீஸ் ?
2015ம் ஆண்டிலேயே சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பமான படம் "சர்வர் சுந்தரம்". 2016லேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2017ல் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்பின் பல முறை படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் இதுவரையிலும் படம் வெளியாகவில்லை. அதன்பின் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தும் அதுவும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான "டிக்கிலோனா" படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்தப் படமும் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். சில பால காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சீரியஸ் படங்களாகவே ஓடிடியில் வந்து கொண்டிருக்கும் நிலையில், சந்தானத்தின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வருவது கொஞ்சம் மாற்றமாகத்தான் இருக்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!