
விமானத்தில் தன்னந்தனியாக மாதவன்
நடிகர் மாதவன், சற்று முன் இன்ஸ்டாகிராம் தளத்தில் சில வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். ஜுலை 26ம் தேதியன்று "அமெரி கி பன்டிட்" படப்பிடிப்பு, வேடிக்கையாக ஆனால், சோகமாக. இது சீக்கிரமே முடிவடைய பிரார்த்திக்கிறேன். அதனால், அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார். துபாய்க்கு அவர் சென்ற விமானத்தில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். விமான நிலையம், விமானநிலைய ஓய்வறை, விமானத்திற்குள் என அவர் மட்டுமே இருக்கிறார். அவ்வளவு இருக்கைகள் கொண்ட விமானத்தில் மாதவன் மட்டுமே பயணித்தாரா என்பது ஆச்சரியமாக உள்ளது.
“எப்படி அவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளன, ஒரு விதமான பயமாக உள்ளது,”, “நம்ப முடியாத ஒன்று”, “சினிமாவில் வரும் காட்சி போல உள்ளது, விமான நிலையம், விமானத்தில் தன்னந்தனியாக”, “இது நகைச்சுவையாக உள்ளது, எத்தனை இருக்கைகள் வேண்டுமானால், நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்,” என ரசிகர்களும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து, “இதுவரையில் இல்லாத வித்தியாசமான விமானம்,” எனக் குறிப்பிட்டுள்ளார் மாதவன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!