
வாழ்க்கையை இன்றே முழுமையாக வாழுங்கள் : அர்ச்சனா
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தற்போது ஒருதகவல் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினேன். எனது மூக்கு வழியாகத்தான ஆபரேசன் நடைபெற்றது. அதனால் பழைய குரல் இன்னும் வரவில்லை. அது வெயிட் குறந்து விட்டேன். தற்போது மீட்புக்கான கடின பாதையில் இருக்கிறேன்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை மாற்ற விரும்புகிறேன், இன்றே முழுமையாக வாழுங்கள், ஏனென்றால் நாளை இருக்குமா என்று உங்களுக்குத்தெரியாதுஎன்று தெரிவித்துள்ள அர்ச்சனா, 24 மணி நேரமுக் கண் தூங்காமல் தன்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு நான் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு வழக்கம் போல் மீடியா பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!