
ஒரே நாளில் சினிமாவில் அறிமுகமான ராதிகா, மீனா
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த "கிழக்கே போகும் ரயில்" படம் தான் ராதிகாவின் முதல் படம். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த "ஒரு புதிய கதை" படத்தின் மூலம் தான் மீனா கதாநாயகியாக அறிமுகமானார்.
மீனா அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான படம் "ஒரு புதிய கதை". அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், 1991ல் வெளிவந்த ராஜ்கிரண் நடித்த "என் ராசாவின் மனசிலே" படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், பாக்யராஜ், சரத்குமார், அர்ஜுன், முரளி, பிரபுதேவா, அஜித் என 90களின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
1978ல் ஆகஸ்ட் 10ல் அறிமுகமான நடிகை ராதிகாவுக்கு முதல் படமான "கிழக்கே போகும் ரயில்" படமே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பின் அவர் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக, பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் கடந்த 43 வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமா மற்றும் டிவிக்களில் ராஜ நடை போட்டு வருகிறார் ராதிகா. தற்போது கூட சிம்பு படம், அருண் விஜய் படம் என படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
மறக்க முடியாத தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒரே நாளில் அறிமுகமான ராதிகா, மீனா ஆகியோருக்குத் தனி இடமுண்டு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!