
முதல் திருமண நாளைக் கொண்டாடும் ராணா டகுபட்டி
கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ள அவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று தங்களது முதலாவது திருமண நாளை இருவரும் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தங்களது திருமண நாளை முன்னிட்டு கணவர் ராணாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, மிஹிகா, “என்னுடைய அன்புக்குரியவருக்கு இனிய ஆண்டு விழா. இது மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு. இந்த உலகம் இருக்கும் வரையிலும், அதற்கு மேலும் உன்னை நேசிக்கிறேன். நீங்கள் நீங்களாகவும், மிகவும் அற்பதமான மனிதராகவும் இருப்பதற்கு நன்றி. இன்னும் நிறைய வாழ்நாள் இருக்கிறது. நாம் இருவரும் அருகில் இல்லாத வரையில், இது ஒரு கவுண்ட் டவுன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராணா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சினிமாவைப் பொறுத்தவரையில் "அய்யப்பனும் கோஷியும்" தெலுங்கு ரீமேக்கில் மட்டும் ராணா நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!