
300 மில்லியனைக் கடந்த சாய் பல்லவியின் 3வது பாடல்
தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் மிக அழகாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்குத்தான் முதலிடம் என தாராளமாகச் சொல்லலாம். மற்ற நடிகைகள் அவர்களது ஆடைகளாலும், கிளாமராலும் ரசிகர்களைக் கவர முயற்சிக்க சாய் பல்லவி மட்டும் அப்படி எதுவுமில்லாமல் தனது நடனத்தால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அதை அவருடைய மூன்று பாடல்கள் நிரூபித்துள்ளன.
வேறு எந்த தென்னிந்தியந்திய நடிகையும், ஏன் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை சாய் பல்லவி செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ், சாய் பல்லவி நடித்த "மாரி 2" படத்தின் "ரவுடி பேபி" பாடல் மட்டும் இதுவரை 1200 மில்லியனைக் கடந்துள்ளது. மேலும், "பிடா" படப் பாடல் "வச்சிந்தே" 309 மில்லியனை கடந்துள்ளது.
இந்தநிலையில், சாய் பல்லவி நடித்து விரைவில் வெளிவர உள்ள "லவ் ஸ்டோரி" படத்தில் இடம் பெற்றுள்ள "சாரங்க தரியா" பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மூன்று 300 மில்லியன் பாடல்களைத் தற்போது தனது சாதனையில் சேர்த்துக் கொண்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!