
பொன்னியின் செல்வன் - ஐதராபாத்தில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு
ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் புதுச்சேரி வந்து தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்களாம்.
"நவரசா" படத்திற்காகப் பேட்டிகள் கொடுத்த போது "பொன்னியின் செல்வன்" முதல் பாகத்திற்கான 70 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக மணிரத்னம் கூறியிருந்தார். அடுத்து ஐதராபாத்தில் நடிக்க உள்ளது தான் கடைசி கட்டப் படப்பிடிப்பாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின் தான் படத்தின் முதல் பார்வை, கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!