
வெப் சீரிஸாக மாறும் சார்பட்டா பரம்பரை 2ம் பாகம்
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகத்தை வெப் சீரிசாக இயக்க உள்ளார், பா.ரஞ்சித். இதனை படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனமே நேரடியாக தயாரிக்கிறது.
இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது: சார்பட்டா பரம்பரை பற்றி ஒரு வெப் சீரீஸ் இயக்கும் திட்டம் உள்ளது. தமிழ்ப் பிரபா, பாக்கியம் சங்கர் உள்ளிட்ட சில எழுத்தாளர்களுடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும். அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இப்போதுதான் பணியை தொடங்கி இருக்கிறோம். அது இரண்டாம் பாகமா? வெப் சீரீசா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியவில்லை. என்கிறார் பா.ரஞ்சித்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!