
அடுத்த சுற்றுலாக்குத் தயாராகும் காஜல் அகர்வால்
தற்போது மீண்டும் சுற்றுலா செல்வதற்கு காஜல் தயாராகிவிட்டார். கடந்த வருடம் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாகத் தொகுத்து அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டு, “கடந்த ஆறு வாரங்களாக தினமும் 16 மணி நேரம் கடுமையான வேலை. கவுதம் கிச்சுலுவுடன் ஒரு பிரேக் எடுக்கக் காத்திருக்க முடியாது. விரைவில்,” எனப் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது தமிழில் பஞ்சாயத்தில் இருக்கும் "இந்தியன் 2" படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கல் சல்மான் நடிக்கும் "ஹே சினாமிகா" படத்திலும் நடித்து வருகிறார். சில பல பஞ்சாயத்துகளால் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் "பாரிஸ் பாரிஸ்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!