
தெலுங்கில் சோடா கம்பெனி நடத்தும் ஆனந்தி
அவர் நடித்து முடித்துள்ள அலாவுதனின் அற்புத கேமரா, டைட்டானிக், ஏஞ்சல் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் சாக்ரட்டீஸ் என்ற துணை இயக்குனரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஆனந்தி தெலுங்கில் நடித்து வரும் படம் ஸ்ரீதேவி சோடா சென்டர். இதனை சுதீர் பாபு இயக்குகிறார். சூரி பாபு ஹீரோ. இது ஒரு கிராமத்து காதல் கதை. சோடா சென்டர் நடத்தும் ஆனந்தி சோடா போன்றே அடிக்கடி பொங்குகிறவர். அவருக்கும் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் சூரி பாபுக்கும் இடையிலான காதலும், காமெடியும் தான் படம். இந்த படம் தெலுங்கில் தனக்கு விட்ட இடத்தை பிடித்து தரும் என்று நம்புகிறார் ஆனந்தி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!