ரூ. 2.5 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய துல்கர் சல்மான்
Advertisement
Advertisement
ரூ. 2.5 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய துல்கர் சல்மான்
ஆக 03, 2021
அ நிறம் | அளவு
Advertisement
மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்க போகும் படங்களின் போஸ்டர்கள் வெளிவந்தன. இந்நிலையில் துல்கர் சல்மான் விலையுயர்ந்த சொகுசு காரான மெர்சிடசை வாங்கியுள்ளார். இதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 2.50 கோடியாகும். துல்கர் சல்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பே கார் விற்பனை தொழில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!