
வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : பலியான தோழியிடம் மன்னிப்பு கேட்டு யாஷிகா உருக்கமான பதிவு
விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது : ‛‛நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து இப்படி காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை பழிப்பதா என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நான் பவணியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நாளை யாஷிகாவின் பிறந்தநாள். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பவணியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் தான் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும். என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு. என்றாவது ஒரு நாள் என்னை மன்னித்துவிடு என்று பதிவிட்டிருக்கிறார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னாலும் பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!