
ஷங்கர் - ராம்சரண் படக் கதாநாயகி கியாரா அத்வானி
இன்று படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2016ல் வெளிவந்த "எம்எஸ் தோனி" படம் மூலம் பிரபலமானவர் கியாரா. தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது "ஷெர்ஷா" என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். "பூல் புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி" ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர், ராம்சரண் முதல் முறையாக இணையும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து ஷங்கர் ஹிந்தியில் இயக்க உள்ள "அந்நிய்ன" படத்தின் ரீமேக்கிலும் கியாராதான் கதாநாயகி என்று ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இரு படங்களுக்காகவும்தான் கியாராவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!