
பொன்னியின் செல்வன் அப்டேட் கொடுத்த சுஹாசினி
இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவி சுஹாசினி சில படப்பிடிப்புப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா டெக்னீஷியன்ஸ், உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் மலை பின்னணியில் சண்டைக்காட்சியை படமாக்குவது போலத் தெரிகிறது. ஒரு ரசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குனர் மணிரத்னத்தின் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றையும் அடுத்து வெளியிட்டார் சுஹாசினி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!