
சூர்யாவுக்கும் இதுதான் முதல்முறை
அதனால் தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன் தமிழன் என்கிற ஒரே ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்த விஜய், அதன்பின் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யவில்லை. அவரது தந்தை இயக்கிய சுக்ரன் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தான் லாயராக நடித்திருந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அஜித்தும் கூட "நேர்கொண்ட பார்வை" என்கிற ஒரு படத்தில் தான் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அதேபோல இத்தனை வருடங்களில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் ஜெய் பீம் என்கிற படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அதிலும் கூட இந்தப்படத்தில் அவர் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதற்காகவே கைதட்டல் வாங்கிய விஜயகாந்த் கூட, ஒருசில படங்களில் மட்டுமே வழக்கறிஞராக நடித்திருந்தார் என்கிறபோது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!