
மாறன் - சத்யராஜ் படப் பெயரில் தனுஷ் 43 தலைப்பு
1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான நாவரசு, ராகிங் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் 2002ல் வெளிவந்த "மாறன்". குடும்பப் பின்னணியில் க்ரைம் த்ரில்லர் ஆக உருவான படம் அந்த "மாறன்".
இந்த 2021ம் ஆண்டு "மாறன்" படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும் போதும் ஒரு ஆக்ஷன் படம் போலத்தான் தோன்றுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது.
தனுஷின் அடுத்த வெளியீடாக வர உள்ள "மாறன்" படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!