
விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்
இன்று முதல் அவர் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சற்று முன் கமல்ஹாசனுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து "விக்ரம்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். கமலுடன் நடிப்பது எவ்வளவு பெருமையாக அவர் உணர்கிறார் என்பதை அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த "வேலைக்காரன்" படத்தில் வில்லனாக நடித்தபின் தமிழில் பகத் பாசில் அடுத்து நடிக்கும் படம் "விக்ரம்".

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!