
குத்துக்கு பத்து அடல்ட் கதை அல்ல: இயக்குனர் விளக்கம்
இது அடல்ட் கண்டன்ட் தொடர் என்று தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள விஜய் வரதராஜ் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது. அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன் தொடரின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் என்றார்.
இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர். 8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!