ஷங்கர் படத்தில் இணையும் ராஷ்மிகா
ஜூலை 22, 2021
Advertisement
குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடித்து வந்த இவர் சாலோ, கீதா கோவிந்தம், தேவதாஸ், டீயர் காம்ரேட், ஸ்ரீலேரு நீக்கவரு, பீஷ்மா படங்களில் தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழில் கார்த்திக் ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தார். தற்போது பிரமாண்ட தயாரிப்பான புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மிஷன் மஞ்சு, குட்பை என பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றும் அதில் ஒருவராக ராஷ்மிகா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னொரு நாயகியாக ஆலியா பட் அல்லது கியாரா அத்வானி நடிக்கலாம் என்று தெரிகிறது. விரைவில் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடக்கிறது. அதற்கு முன்னதாக படத்தின் அதிகாரபூர்வமான பட்டியல் வெளியாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!