
நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்படம் 2011ல் வெளிவந்த "பிளைன்ட்" என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டார்கள். படத்தில் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளார். டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் ஆண்டு துவக்கத்திலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதன்பின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி வந்த நிலையில், படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது.
அதை உறுதிபடுத்தி படத் தயாரிப்பாளர் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த "மூக்குத்தி அம்மன்" ஓடிடியில் நேரடியாக வெளியாகியது. அதன்பின் நயன்தாராவின் அடுத்த வெளியீடான "நெற்றிக்கண்" படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!