
ஆர்ஆர்ஆர் படத்தில் அனிருத் பாடல் ?
இசையமைப்பாளர் கீரவாணி ஒவ்வொரு மொழியிலும் இருந்தும் ஒரு பிரபலத்தைத் தேர்ந்தெடுத்து பாடலை பாட வைக்கப் போகிறாராம். ஹிந்தியில் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதியும், தமிழில் அனிருத்தும் அப்பாடலைப் பாடப் போகிறார்களாம்.
இது குறித்து அனிருத்திடம் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கேட்டதும் அனிருத் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். ஏற்கெனவே மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் சில ஹிட் பாடல்களைப் பாடியுள்ளவர் அனிருத்.
"ஆர்ஆர்ஆர்" போன்ற பிரம்மாண்ட படைப்பில் பங்கெடுப்பதில் அவருக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். "இந்தியன் 2" படம் தாமதமாகி வரும் நிலையில் "ஆர்ஆர்ஆர்" படத்தில் அனிருத் ஒரு பாடலைப் பாடினால் அவருக்கு அது இன்னும் புகழைத் தேடிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!