
கவர்ச்சியின் உச்சத்தில் அமலாபால்
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், குடி யெடமைதே என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை அமலா, இன்டாகிராம் பக்கத்தில் கடந்த சில தினங்களாக கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் நீச்சல் குளம் அருகே கிளாமரான போட்டோவை பதிவிட்டார். நேற்று மேலும் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!