
மனசாட்சி உள்ளவர்கள் அதை செய்ய மாட்டார்கள் : நிதி அகர்வால்
தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர். இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது டுவிட்டர் பதிவில், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைத்து பூரிப்படைகிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனது ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிட வேண்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும் கொரோனா நிவாரண நிதிக்கும் ஒரு லட்சம் அளித்தார்.
இந்நிலையில் நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சலுடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த இந்த படங்களை யாரோ வெளியிட்டுவிட்டனர். பிகினி புகைப்படங்கள் என்பதை குறிப்பிடாமல் நிதி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது, என்னுடைய ஒரு குறிப்பிட்ட புகைப்படம் அடிக்கடி பகிரப்படுவதை பார்க்கிறேன். அதை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி இருக்கும் யாரும் அந்த புகைப்படங்களை பதிவிடவோவோ, பகிரவோ மாட்டார்கள். அது தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!