
நரப்பா ஓடிடி ரிலீஸ் : மன்னிப்பு கேட்கும் வெங்கடேஷ்
இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே அதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். படத்தை தியேட்டர்களில்தான் வெளியிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதையும் மீறி படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த வெங்கடேஷ், “நரப்பா, படம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த கொரானோ தொற்று காலத்தில் படத்தை வெளியிட வேறு வழியில்லை. ஓடிடி வெளியீடு என்பது கடைசி வழியாக அமைந்தது. அமேசான் தளத்தில் படத்தை வெளியிடுவதால் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழைப் போலவே படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெறுமா என்ற ஆவல் எழுந்துள்ளது. படத்தின் டிரைலருக்கு 11 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!