
முதல் பிரிமியர் ஷோவிலேயே விற்பனையானது அருள்நிதி படம்
இதுகுறித்து அதன் உரிமையாளர் பி.சக்திவேலன் கூறியிருப்பதாவது: அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான களத்தில் சந்திப்போம் திரைப்படம் திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.
ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.
அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வெறும் வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால் நாங்கள் இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!