
இப்போதும் மனநல ஆலோசனை பெற்று வருகிறேன் : ஸ்ருதிஹாசன்
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : நான் ஒரு உளவியல் மாணவி. நான் கல்லூரியை விட்டுப் பாதியில் வெளியேறினாலும் உளவியல் படிப்பைத் தொடர்ந்தேன். மனநல ஆலோசகர்கள் பலர் என் நண்பர்களாக இருக்கின்றனர். சிறு வயதிலும் இப்போதும் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியோ அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் முதல் நாள் காரமான பொருட்களைத் தவிர்த்து விடுவோம். இரண்டாவது நாள் வீட்டிலேயே இருக்கும் சாப்பிடுவோம். மூன்றாவது நாளும் வலி தொடர்ந்தால் தான் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம். ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காததுபோல தலையைத் தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமானது. மன நலனை பொறுத்தவரை தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் தெரிவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!