
உதவி இயக்குனர் தமிழ் படத்தை புரமோசன் செய்த சிவராஜ் குமார்
அவரது அட்ரஸ் படத்தின் டீசரை பார்த்து பாராட்டிய அவர் அதனை கேட்டு வாங்கி, படம் பற்றி தான் பேசி, அதனை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரு தமிழ் துணை இயக்குனருக்கு கன்னட நடிகர் இந்த அளவிற்கு இறங்கி வந்து புரமோசன் செய்து கொடுத்தது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ராஜமோகன் கூறியதாவது: மொழி வாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கி கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதை தான். அட்ரஸ் படத்தின் டீஸரை பார்த்துவிட்ட சிவராஜ் குமார் பாராட்டினார். டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!