
தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: ஜாக்கிசான்
ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசானுக்கு இப்போது 67 வயதாகிறது. ஜாக்கிசான் என்றாலே ஆக்ஷன் படங்கள் தான். முதுமை காரணமாக அவரால் தற்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் இனி அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார். தற்போது சீன திரைப்பட சங்க துணை தலைவராக இருக்கும் ஜாக்கிசான், பெய்ஜிங்கில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தான் விரைவில் நேரடி அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார்.
அவர் பேசியதாவது: சமீபகாலமாக சீனா வேகமாக முன்னேறி வருவதை பல நாடுகளுக்கு நான் செல்லும்போது உணர முடிகிறது. நான் சீன குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுவதும் 5 நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடிக்கு மரியாதை கிடைக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை மிகக்குறைந்த காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. அந்த கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவில் நான் நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டேன். அதனால் இனி வரும் காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!