
மகளை அறிமுகப்படுத்தும் மூடர் கூடம் நவீன்
இப்படத்தில் அக்ஷரா ஹாசன், சம்பத், ஜே சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இயக்குனர் நவீனின் மகள் சீவின் அக்னிச் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது, ஒரு தேர்ந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!