
தலைவி வெளியீடு எப்போது?
ஆனால், படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் படத்தின் வெளியீடு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, படத்தின் நாயகியாக கங்கனா அது பற்றி இன்ஸ்டாகிராமில், “தலைவி" படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. வதந்திகளிலிருந்து விலகி இருங்கள். நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை வெளியிடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினம், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் படம் வெளியாகுமா அல்லது சாதாரண நாட்களில் வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!