
அறிவிப்பு இல்லாமல் வந்த வலிமை அப்டேட் - டிரெண்டிங்கில் நம்பர் 1
அஜித் பிறந்த நாளான மே 1-ஆம் தேதியன்று வலிமை அப்டேட் வந்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் எப்போது அப்டேட் வரும் என அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான பதிலையும் வலிமை படக்குழு அறிவிக்கவில்லை
இந்நிலையில் நேற்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மாலை திடீரென வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வலிமை படத்தின் முதல்பார்வை போஸ்டர் களையும் வெளியிட்டனர். முன்னறிவுப்பு இல்லை என்றாலும் வலிமை அப்டேட் வந்தது என்ற மகிழ்ச்சியில் நேற்று வலிமை அப்டேட் பற்றிய முதல் பார்வை போஸ்டர்கள் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் அதிகமாக லைக் செய்து அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் யுடியூப்பில் 24 மணிநேரம் கடந்து தொடர்ந்து டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது வலிமை மோஷன் போஸ்டர். வலிமை படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!