
தமிழில் வெளியாகிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9ம் பாகம்
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. பல முறை ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கொரோனாவின் 2வது அலை சற்று தளர்ந்ததும் கடந்த மே மாதம் தென்கொரியாவில் முதலில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த மாதம் வெளியானது. படத்தை பற்றி இருவித விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படம் இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று யுனிவர்ஸல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும், இந்தியாவில் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!